நான்காவது கட்ட ஈழப்போரில், இலங்கைப் படைகளுக்கு கைகொடுத்த ஜெட்லைனர் துருப்புக்காவி கப்பல் இன்று இறுதிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
2006ம் ஆண்டு தொடக்கம் பயன்படுத்தப்பட்ட இந்தக் கப்பலை 6 ஆண்டுகளுக்கு பின்னர், கைவிடுவதற்கு இலங்கை கடற்படை முடிவு செய்துள்ளது.
போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது,இந்தோனேசிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து இந்தக் கப்பல் குத்தகைக்கு பெறப்பட்டிருந்தது.
3000 படையினரை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லும் வசதிகளைக் கொண்ட இந்தத் துருப்புக்காவிக் கப்பல், போரின் போது வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில், இலங்கைப் படையினரையும் பொருட்களையும் விரைவாக இடம்நகர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.
கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், திருகோணமலையில் இருந்து இந்தக் கப்பல் வாரத்துக்கு மூன்று தடவைகள் காங்கேசன்துறைக்கு படையினரையும் பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாண குடாநாட்டின் மீதான விடுதலைப் புலிகளின் முற்றுகையை இலங்கைப் படையினர் உடைப்பதில் இந்த துருப்புக்காவி முக்கிய பங்கு வகித்திருந்தது.
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், இதற்கு வேலையில்லாமல் போய் விட்டதால், உள்நாட்டுச் சேவைகளிலும், கருத்தரங்குகள், விழாக்களை நடத்துவதற்கான மிதக்கும் அரங்கமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தக் கப்பலை இலங்கை கடற்படை திருப்பி அனுப்புவதற்கான காரணம் வெளிப்படுத்தப்படாத போதிலும், இதனை பராமரிப்பதற்கு பெருமளவில் ஏற்படும் செலவினமே காரணம் என்று கூறப்படுகிறது.
இன்று காலை இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.