மதுரை சிலைமான் அருகே உள்ள எஸ். புளியங்குளத்தை சேர்ந்த 20 பேர் ஒரு காரில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு அருப்புக்கோட்டை வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் மதுரை ரிங் ரோட்டில் வந்து கொண்டு இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அந்த கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடி விட்டது.
இந்த சம்பவத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த காரில் சென்ற 20 பேரும் பயங்கர தீக்காயம் அடைந்தனர்.
அவர்களில் சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் பலத்த காயம் அடைந்த சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.