
இந்த புயலுக்கு மாநிலத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரப்பட்டிருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன. மழையினால் ஏற்பட்ட வெள்ள நீர் சில மாவட்டங்களில் தேங்கியுள்ளது.
மாநிலத்தின் விஜயவாடா, காக்கிநாடா பகுதிகளில் சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
நேற்று மாநில உள்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அதிகாரியும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டனர்.
மேலும் அரசு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்வதில் தோற்று விட்டது என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட வேண்டும் என்று தெலுங்கு சேதம் கட்சியின் தலைவர் முத்துகிருஷ்ணாம் நாயுடு கூறியுள்ளார்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஜாயாம்மா இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.