
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சாண்டி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை மீண்டும் புதிய சூறாவளி தாக்கவிருக்கிறது.
புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சூறாவளியினால் நியூயார்க் நகரில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
சாண்டி சூறாவளியினால் இப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் இல்லாத நிலையில் புதிய சூறாவளியினால் தொடர்ந்து மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளது.