
இவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்த வேண்டியுள்ளதாலும், சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறவேண்டியுள்ளதாலும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலங்கை காவல்துறையின் தீவிரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சரத் பத்தேவெல, நீதிபதியிடம் கோரியிருந்தார்.
1991ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த சந்தேகநபர், பல்வேறு இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர் என்றும் 1994ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இவரைத் தாம் கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்ததாகவும் இலங்கை
காவல்துறை தீவிரவாத விசாரணைப்பிரிவு பணிப்பாளர் கூறியுள்ளார்.