கூடங்குளம் மக்களுக்கு தொடர்ந்து இன்னல்களுக்கு இன்னல் வந்தவண்ணமே இருக்கிறது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக நீதி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் சுகுணா, மாலா ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
நீதி விசாரணை கேட்டு தாக்கல் செய்த மனுவில், கூடங்குளத்தில் காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டதாக அரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்திருந்தார். இதை ஏற்ற நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தினர். இந்நிலையில் இன்று மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.