அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. அதற்கு முன்னதாக இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நடந்தது.அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும்
அதிபர் ஒபாமா லோவா மாகாணத்தில் கேஸ்மொயின்இடத்தில் பேசினார்.
அப்போது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.அவர்கள் மத்தியில் பேசிய அவர் கடந்த 2008-ம் ஆண்டுநடந்த அதிபர் தேர்தலில் உங்களின் (லோவா மக்களின்)மீறல்தான் உலகையே மாற்றியது. அப்போது எனக்கு நீங்கள்உங்கள் அமோக ஆதரவை அளித்தீர்கள். அது போன்றுஇப்போதும் உங்களை நாடி உதவி கேட்டு (வாக்குகளை கேட்டு) வந்து இருக்கிறேன். அதன் மூலம்தான்எங்களின் நடவடிக்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை செய்து இருக்கிறோம். இன்னும் பல பணிகளை செய்துமுடிக்க வேண்டியுள்ளது. எங்களது பயணம் தொடர வேண்டும். அதற்காக சாலைகளை (வெற்றிகளை)பெறவேண்டும். எனவே உங்களின் அமோக ஆதரவை எங்களுக்கு தாருங்கள் என்றார்.
அப்போது உணர்ச்சி வேகத்தில் அவர் தேம்பி அழுதார். அவரது இடது கன்னத்தில் கண்ணீர்வழிந்தோடியது. அதை துடைத்து கொண்டே பேசினார். அவருடன் மனைவி மிச்செலி, இசை கலைஞர்புரூஷ் ஸ்பிரிங் ஸ்டீன் ஆகியோர் சென்று இருந்தனர்.
கடந்த 2008-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது ஒபாமா தனது தேர்தல் பணிகளை லோவாமாகாணத்தில் உள்ள தேஸ்மொய்ன்சிங்ல் தான் தொடங்கினார். தற்போது இறுதிகட்ட தேர்தல்பிரசாரத்தை அவர் அங்குதான் முடித்தார். அப்போது எனக்கு மீண்டும் ஓட்டு போட்டு அதிபராக்குங்கள் எனபேச்சை முடித்தார்.