Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருப்பூரில் அதிமுக நகர் மன்ற செயலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை


திருப்பூரில் அதிமுக நகர் மன்ற செயலர்(கவுன்சிலர்) மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் 22 வது நகர் மன்ற அதிமுக செயலர் முத்துசாமி என்கிற காட்டன் முத்து (60). இவர் சின்னப்பா லே அவுட் என்.ஆர்.கே. மெயின்ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.நேற்றிரவு முத்து அவரது குடும்பத்தினரை அருகிலுள்ள தோட்டத்து வீட்டில் விட்டு விட்டு வீடு வந்துள்ளார். இன்று அதிகாலை வழக்கமாக நகர் மன்ற செயலர் வீட்டிற்கு சென்று வருகை பதிவேட்டில் கையப்பமிட துப்புரவு தொழிலாளர்கள் வந்துள்ளனர். அப்போது, முத்து வெட்டுப்பட்டு இறந்து கிடப்பத்தை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post