
அசான்ஞை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரின் நோய் எப்போது வேண்டுமானாலும் தீவிரமடையும் எனவும் ஈகுவேடார் நாட்டின் தூதுவர் அனா ஆல்பன் தெரிவித்தார்.
50 சதுர அடி அளவுள்ள அரையில், போதிய காற்று வசதி இல்லாத இடத்தில் தங்கியிருப்பதால் அசான்ஞிற்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் நோய் தீவிர மடையும் எனவும் ஆல்பன் கூறினார்.
கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 41வயதான அசான்ஞ் பிரிட்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.