Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பொறுப்புக்கூறுவதற்கு போதிய நடவடிக்கைகள் இல்லை – இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

இலங்கையில் பொறுப்புக்கூறும் விவகாரங்களில் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 

“காணாமற்போதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள், குறிப்பாக ஊடகவிலாளர்கள் கட்டாயமாக காணாமற்போதல்கள் கவலையளிக்கின்றன. 

பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன. 

லசந்த விக்கிரமதுங்க கொலை ,பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைகள், திருகோணமலையில் மாணவர்கள் கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. 

இந்தப் பிரச்சினைகளுக்கு பொருத்தமான முறையில் தீர்வு காணப்படவில்லை. 

காணாமற்போனவர்கள் விவகாரங்களுக்கு திருப்தியான முறையில் பதிலளிக்கப்படவில்லை. 

இதற்கு விளக்கங்கள் தேவை. குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும். 

ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை. 

எனினும் இதன் உறுப்பு நாடுகள் பல்வேறு விவகாரங்கள் குறித்த கருத்துகளை முன்வைத்துள்ளன. 

பல்வேறு விவகாரங்கள் குறித்து, குறிப்பாக காணாமற்போதல்கள், பலவந்தமாக காணாமற்போதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவை அங்கு கவலை வெளியிட்டுள்ளன. 

இந்த விவகாரங்கள் பற்றி எமது ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் பலவும் கவலை வெளியிட்டுள்ளனர். 

அண்மையில் இலங்கைக்கு  பயணம் மேற்கொண்ட நிபுணர்குழுவும் இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post