
இலங்கை அரசாங்கத் தரப்புடன், பேச்சுக்களை நடத்துவதற்காகவே இவர் கொழும்பு வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவகாரங்களின் தற்போதைய நிலை குறித்த அவர் இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், நிலைமைகளையும் நேரில் கண்டறியவுள்ளார்.
ஒபாமா மீண்டும் அதிபராகத் தெரிவான பின்னர், இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள முதலாவது உயர்மட்ட அதிகாரியான அலிஸ்ஸா ஐரிஸ் எத்தனை நாட்கள் இங்கு தங்கிருப்பார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.