Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முல்லைப் பெரியாறு வழக்கில், இறுதி விசாரணைக்கான தேதியை உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

முல்லைப் பெரியாறு வழக்கில், இறுதி விசாரணைக்கான தேதியை உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது. நீதிபதி ஆனந்த் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும், கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியிலும் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அணையின் பலம் குறித்து ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தது.
[vuukle-powerbar-top]

Recent Post