சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் "சொட்ட வாழைக்குட்டி" படத்திற்கான நாயகி தேர்வு தொடர்ந்து இழுபறியில் உள்ளது.கும்பகோணம் பகுதியில் படமாக்கப்படவுள்ள இப்படத்தின் கதையானது நகைச்சுவை கலந்த காதல் இரசனையோடு உருவாகவுள்ளது.
முதலில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது ஆயினும் பின்னர் ஹன்ஷிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் இவர்கள் இருவரதும் தேதிகள் ஒத்துவராத நிலையில்,நடிகை சமந்தாவை தேர்வு செய்துள்ளார் சற்குணம்.
இன்னும் ஒரு சில நாட்களில் இப்படத்தில் சமந்தா நடிப்பாரா இல்லையா என்பது தெரியவரும்.இதன்பின்னரே தங்கள் படத்திற்கான நாயகி சிக்கலில் இருந்து விடுபடவுள்ளனர் "சொட்ட வாழைக்குட்டி" படக்குழுவினர்.
தற்போது "மரியான்" படத்தில் நடித்து வரும் தனுஷ் இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்ததும் "சொட்ட வாழைக்குட்டி" படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.