இன்று உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி மக்கள் இணைந்து அமைதிப்பேரணியினை மேற்கொண்டுள்ளனர்.
இது இன்று காலை பத்து மணியளவில் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக தோமையார்புரம் நோக்கி சென்றனர். அதே போல் கூத்தன்குழியில் இருந்து தோமையார்புரத்திற்கு கூத்தன்குழி மக்களும் பேரணியாக வந்து சேர்ந்தனர்.
தோமையார்புரமானது இடிந்தகரைக்கும் கூத்தன்குழிக்கும் இடையில் இருக்கக்கூடிய ஊராகும் இது இடிந்தகரையில் இருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் அணுஉலை போராட்ட குழு தலைவர்கள் மற்றும் இடிந்தகரை, கூத்தன்குழி மக்கள் அனைவரும் தோமையார்புரம் கடல் அன்னையை வணங்கிவிட்டு தங்களது போராட்ட பேரணியினை முடிவு செய்துள்ளனர்.