உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி 2002 -ம் ஆண்டில் தாஜ் காரிடர் வணிக வளாக திட்டத்தை துவங்கி வைத்தார்.இந்த திட்டத்தில் 17 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டில் சிபிஐ விசாணைக்கு உத்தரவிடப்பட்டது.மேலும் இது தொடர்பாக மாயாவதிக்கு எதிராக 7 பொது நலன் வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாயாவதிக்கு எதிரான பொதுநலன் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.