முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, பிப்ரவரி 19-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான 5பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று முல்லை பெரியாறு அணையின் பலம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிப்ரவரி 19ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
ஆய்வு குழுக்கள் சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பாக தமிழகம் அல்லது கேரளாவிற்கு ஏதேனும் சந்தேகமோ, மாற்று கருத்துக்களோ இருந்தால் அதனை ஜனவரி மாதம் 28ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஏ.எஸ்.ஆனந்த் தலையிலான 5பேர் அடங்கிய குழு முல்லை பெரியாறு அணையை சோதித்து இறுதி அறிக்கையும், துணைகுழுக்களின் ஆய்வுகளையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை தமிழக கேரள அரசிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை மீதான இறுதி கட்ட விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.