Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கறுப்பு பணத்தினை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரதம்

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தினை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவின் யோகா டிரஸ்டுகள் மக்களிடம் வசூலித்த ரூ.5 கோடி பணத்திற்கு முறையாக வரி கட்டாததாக கூறி அவற்றுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் அமைந்துள்ள ராம்தேவின் இரு யோகா அமைப்புகளான பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா டிரஸ்ட் ஆகியவை மக்களிடம் யோகா கற்று தருவதாக கூறி அதற்கு கட்டணமாக வசூலித்த தொகை ரூ.5.14 கோடிக்கு முறையாக வரி கட்டாததால் வருவாய் துறையினர் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

எனினும், இது குறித்து யோகா மையத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே. தீஜரவாலா கூறும்போது, டிரஸ்ட் அமைப்பானது மருத்துவ சேவை உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவதால் வரி செலுத்துவதிலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் மறைப்பதற்கு என்று ஒன்றும் இல்லை என அவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post