எகிப்து நாட்டில் கெய்ரோவில் இருந்து சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று பேயோம் என்ற இடத்தில் மற்றொரு தொடருந்து மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக குற்ற புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பவத்திற்கு உரிய காரணம் கண்டுபிடிக்கப்படும் என பேயோம் நகர கவர்னர் அகமது அலி அகமது தெரிவித்தார்.
எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.