Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர்

புயலால் கடலுக்குச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர்.

நீலம் புயல் காரணமாக சென்னை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் தற்போது கடல் சீற்றம் குறைந்ததுடன், வானிலையும் சீராக உள்ளது.

இதனால் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் , பாம்பன், மண்டபம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post