Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 13 பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்

புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 13 பெண்களுக்கு விலை யில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் மனோகரன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட் டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மனோகரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இலவச தையல் இயந்திரம் கோரி 39 மனுக்களும், பசுமை வீடு கோரி 30 மனுக்களும், நில அளவை கோரி 7 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 12 மனுக்களும் பெறப்பட்டன.

மேலும் ரேஷன் கார்டு கோரி 19 மனுக்களும், தாட்கோ கடன் கோரி 5 மனுக்களும், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகை கோரி 30 மனுக்களும், காவல்துறை நடவடிக்கை கோரி 18 மனுக்களும், வீட்டு மனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 52 மனுக்களும், இதர மனுக்கள் 56 என மொத்தம் 268 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், கலெக்டர் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் புதுவாழ்வு திட்டம் சார்பாக, திட்டத்தின் நோக்கமான ஆற்றல் அளிப்பு மற்றும் வறுமை குறைப்பினை செயல்படுத்தும் மக்கள் அமைப்பான கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு முதல் தவணை நிதி ரூ.1 கோடியே 5 லட்சத்து 98 ஆயிரத்தை, 20 வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். 4 ஒன்றியங்களில் (அன்னவாசல், கந்தர்வக் கோட்டை, கறம்பக்குடி மற்றும் குன்னண்டார் கோவில்) உள்ள 155 ஊராட்சிகளில், 131 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை ரூ.6 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரம் முதல் தவணை நிதியாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மீதம் உள்ள 24 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆலங்குடி வட்டம், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் 13 பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், எச்.ஐ.வி. நோயினால் பாதிக் கப்பட்டுள்ள இலுப்பூர் வட்டம், தேராவூர் ஊராட்சி யில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரது மனைவி வள்ளிக்கண்ணு, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித்தொகை வழங்க வேண்டி கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவின் மீது அந்த இடத்திலேயே உடனடி நடவடிக்கை மேற் கொள்ள கலெக்டர் உத்தர விட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாகராசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சொக்கன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பாக்கியம் தேவ கிருபை, புதுவாழ்வு திட்ட மேலாளர் வசுமதி ஆகியோர் உள்பட அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டி தேயிலைத்தூள் (டீ) சிறப்பு விற்பனை நிலையத்தை மாவட்ட கலெக்டர் மனோ கரன் தொடங்கி வைத்தார். அப்போது, இந்த விற்பனை நிலையம் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று செயல்படும். இந்த ஊட்டி தேயிலைத்தூள் 100 கிராம் பாக்கெட் ரூ.13–க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச் சந்தை விற்பனையை விட குறைவான விலைக்கு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் இந்த ஊட்டி தேயிலைத்தூளை(டீ) வாங்கி பயன்பெறுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நாகராசன், மண்டல இணைப்பதிவாளர் குமார், துணைப்பதிவாளர் மனோகரன், நில அளவர் ராமையா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் முருகன், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post