Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

13வது திருத்தம் இல்லாது போயிருந்தால் அமெரிக்காவே உடைந்திருக்கும்

அமெரிக்க அரசியலமைப்பில் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்திருக்காது போயிருந்தால், அந்த நாடு பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் என்று இலங்கையின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“மாகாணசபை முறைமை தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். சிலருக்கு 13வது திருத்தமே கசக்கிறது.

அமெரிக்க அரசியலைமைப்பில் கூட 13வது திருத்தம் இருக்கிறது.

13வது திருத்தத்தில் உள்ள நல்ல விடயங்கள் சிலருக்குத் தெரிவதில்லை.

அமெரிக்க அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் தொடர்பான, ஸ்டீபன் ஸ்பில்பேர்க் இயக்கிய 'லிங்கன்' என்ற திரைப்படத்தை பார்த்தால் 13வது திருத்தம் அவர்களுக்குக் கசக்காது.

இத்தகையதொரு திருத்தம் அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்படாது போயிருந்தால், அமெரிக்கா பல நாடுகளாக பிரிந்திருக்கும்.

இன்று ஐக்கிய அமெரிக்கா என்ற ஒரு நாடே இருந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post