Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.20 குறைந்தது



சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.20 குறைந்தது. இந்த விலை குறைவு  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், விலையை கச்சா எண்ணெய் விலைநிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.இதன் அடிப்படையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இங்கு பெட்ரோல் விலை உயர்வதும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கு பெட்ரோல் விலை குறைவதும் வழக்கமாக உள்ளது.
அதன்படி சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.19 ஆக இருந்தது. இப்போது 95 பைசா குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.24 ஆக இருந்தது.
சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை ரூ.71.77 ஆக இருந்தது, லிட்டருக்கு ஒரு ரூபாய் 20 பைசா குறைந்து ரூ.70.57 ஆனது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைவு அமலுக்கு வந்தது.
[vuukle-powerbar-top]

Recent Post