சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான, அண்ணா நினைவு வளைவை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணாநகர் சாலை உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் 117 கோடி ரூபாய் செலவில், இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, அண்ணாநகரின் நுழைவு வாயிலாக கருதப்படும் அண்ணா பவளவிழா நினைவு வளைவை, அகற்ற நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதற்கு சென்னை மாநகராட்சியும் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, இந்த வளைவை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றிரவு 11 மணிக்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு தொடங்கி விடிய விடிய இந்தப் பணி நடைபெற்று வருகிறது. கிரேன் உதவியுடன், கட்டிங் இயந்திரங்கள் மூலம், வளைவை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வளைவு அகற்றப்படுவதை அறிந்து அண்ணநகர் பகுதியைச் சேர்ந்தோரும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுடம் குவிந்தனர்.