இன்றோடு 27 ஆவது நாளாக உணவை மறுத்தும், 13 ஆவது நாளாக தண்ணீர் அருந்துவதை மறுத்தும், நீதிகேட்டு அறப்போர் நடத்தும் ஈழத்துத் தமிழ் இளைஞர் செந்தூரனின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரக்கூடும். அவரது கோரிக்கைகள் நியாயமானவை.
செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்கள் எனப்படும் மன வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், ஏற்கனவே தங்கள் உறவுகளை சிங்களன் நடத்திய இனப்படுகொலையில் பறிகொடுத்து, ஆறுதல் தேடி தொப்புள் கொடி உறவுகள் வாழும் தமிழ்நாட்டுக்கு வந்த இடத்தில், அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு முகாம்களில் தமிழக அரசின் காவல்துறை அடைத்த செயல் மனிதாபிமானம் அறவே அற்ற, ஈவு இரக்கமில்லாத அக்கிரமமான அராஜகம் ஆகும்.
செந்தூரனின் கோரிக்கைகளை ஏற்று, ஈழத்தமிழர்களை இந்த மன வதை முகாம்களில் இருந்து விடுதலை செய்து திறந்தவெளி முகாம்களுக்கு உடனடியாக தமிழக அரசு அனுப்ப வேண்டும்.
செந்தூரன் உயிரைக் காப்பற்றுவதற்காக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 3 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஏற்கனவே, சென்னை மாநகரில், எழும்பூர் தாயகத்தில் தொடர் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுவதால் வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும்.
செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 4 மணியளவில், மதுரை மாநகரில் நடைபெற இருக்கும் இந்த அறப்போரில் நான் பங்கேற்கிறேன்.
செந்தூரன் உயிரைக் காப்பாற்ற மனிதநேயம் கொண்டவர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கேற்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
01.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க
செந்தூரன் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வலியுறுத்தி - ம.தி.மு.க. நடத்தும் உண்ணாநிலை அறப்போர்
ஆகஸ்ட் - 27 முதல் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் நிறைவுசெய்து உரையாற்றுவோர்
செப்டம்பர் 1 - பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியாதாசன்
செப்டம்பர் 2 - இரா.நல்லகண்ணு (இ.பொ.க)
செப்டம்பர் 3 - பெ.மணியரசன் (த.தே.பொ.க)
செப்டம்பர் 4 - ஹைதர் அலி (ம.ம.க)
செப்டம்பர் 5 - பேராசிரியை சரஸ்வதி
செப்டம்பர் 6 - வழக்கறிஞர் புகழேந்தி
செப்டம்பர் 7 - நாஞ்சில் சம்பத்
செப்டம்பர் 8 - திருப்பூர் சு.துரைசாமி
செப்டம்பர் 9 - டாக்டர் இரா.மாசிலாமணி
செப்டம்பர் 10 - கொளத்தூர் மணி
செப்டம்பர் 11 - இமயம் ஜெபராஜ்
செப்டம்பர் 12 - வழக்கறிஞர் ஜி.தேவதாஸ்
செப்டம்பர் 13 - பேராசிரியர் தீரன்
செப்டம்பர் 12 -
செப்டம்பர் 13 - பேராசிரியர் தீரன்
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
01.09.2012