கடலூர் துறைமுகம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 28 பேர் காவல்துறையிடம் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு அகதிமுகாமில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் படகில் ஏறிய போது தமிழக கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி அகதிகள், மேலதிக விசாரணைக்காக மீண்டும் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவிய ஈரோடு அகதிகள் முகாமை சேர்ந்த கௌசல்யன் மற்றும் படகு ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அனைவரும், தலா ஒரு இலட்சம் வீதம் படகின் முகவருக்கு கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.