நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பற்றிய புதிய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஆழ்ந்த விண்வெளியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில் பயணம் செய்யும்போது அங்குள்ள கதிரியக்கம் காரணமாக ஆண்களின் இனப்பெருக்க செல்லில் பாதிப்பு ஏற்படும்.
மேலும், அந்த குழுவில் கர்ப்பிணி பெண்கள் இடம் பெற்றிருந்தால் அவர்களின் சிசு வளர்ச்சி பாதிக்கப்படும். சிசு வளர்வதற்கு முக்கியமான மரபணு, கதிரியக்கத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதால் அது பிறக்கும் குழந்தையின் மூளை உட்பட எல்லா உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளதென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனினும், வளிமண்டலம் வழியே பயணம் செய்யும்போது அது கதிரியக்க கதிர்களை உறிஞ்சி கொள்கிறது என்பது சற்று ஆறுதல் தரும் விசயம் என அவர்கள் மேலும் கூறுகின்றனர்.