மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சுவாச பிரச்சினைக்காக சிகிச்சை பெறுகிறார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள் உள்ளார். அதே ஆதீனத்தில் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவதற்காக அவர் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள மெயின் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து அங்குள்ள ஒரு வார்டில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாக தரப்பில் கூறியதாவது:-
மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடக்கின்றன. மூச்சுத்திணறலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இவ்வாறு ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.