மும்பை தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கசாப், கருணை மனு தாக்கல் செய்தால் விரைந்து முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மேலும் மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தானில் வசிக்கும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முக்கிய குற்றவாளியான கசாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிபடுத்திய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை, பாகிஸ்தான் அரசிடம் அதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பாக இயக்கத்தின் நிறுவனர் ஹசீஃப் சயீத் உள்ளிட்டோரை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.