தமிழர் தேசத்துக்கு எதிரான சிங்கள பேரினவாதப் படைகளின் நடவடிக்கைகளில், தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் முக்கியமானது. பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்ற போதும், சிங்களப் படைகள் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
அதேவேளை, ஆயிரக் கணக்கான தமிழ்பெண்களை தமது காமப் பசிக்கு இரையாக்கினார்கள். இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய புளொட் ஒட்டுக்குழுவின் 'புளொட் மோகன்' எனப்படுபவர் மட்டும் 622 தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தியாதாகவும், அதுவே அவர் கொழும்பில் வைத்து விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவால் சுடப்படுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றெனவும் எனவும் தெரியவந்தது.
இவ்வாறிருக்க, போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டதாகவும், நாட்டு நிலைமை வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் கூறும் அதேவேளை 'புனர்வாழ்வு என்ற பெயரில் உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட முன்னால் பெண் போராளிகள் பலர் இலங்கை படைகளால் தற்போதும் தொடர்ச்சியாக பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சியடையும் செய்திகள்
அலை செய்திகள்.கொம்முக்கு கிடைத்துள்ளன.
அலை செய்திகள்.கொம்முக்கு கிடைத்துள்ளன.
இது சிங்கள பேரினவாதத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு படலத்தின் ஒரு அங்கமாகும்.