![]() |
சிப்லா நிறுவனத்தின் புதிய சாதனை |
சிப்லா நிறுவனம் தனது புதிய சாதனையாக நான்கு ஜோடி மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக எச்.ஐ.வி / எய்ட்ஸ்க்கான சிகிச்சைக்கு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ.158-க்குக் கிடைக்கும். க்யுவிர் என்ற இந்த மருந்தில், ஒரு கிட் என்பதில் இரண்டு வித மாத்திரைகள் இருக்கும். ஒருநாள் சிகிச்சைக்கு இரண்டு வேளை என இரு மாத்திரைகள் கொண்டதாக இது இருக்கும். எய்ட்ஸ் நோயாளிகள் மூன்று வேளையும், அதிக அளவிலான எண்ணிக்கை கொண்ட மாத்திரைகளை சாப்பிடுவதில் இருந்து விளக்கு அளிக்கவே,
இவை ஆங்கிலத்தில் 'குவாட் பில்' (Quad Pill) என அழைக்கப்படும். இந்த மருந்து அட்டையை சிப்லா நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குனருமான ஒய்.கே.ஹமீத் அறிமுகப்படுத்தினார்.
இந்த மாத்திரையைப் பற்றி மேலதிக விபரங்கள் தரும் நமது பதிவு:
http://www.newsalai.com/2012/07/new-quad-pill-for-aids.html