தென் கொரியாவின் ஜீ ஜூ தீவுகளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த இரண்டு படகுகளும் கடலில் மூழ்கியுள்ளன.
ஜப்பானின் ஒகினாவா தீவுகளை ஏற்கனவே பொலாவென் புயல் தாக்கியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதனால் அங்கு மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
தற்போது தென் கொரியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.