சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 24 பேர், மட்டக்களப்புக்கு கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது கைதாகியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பொருட்டு அவர்களை இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.