Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.நாவின் மனித உரிமை மீளாய்வில் இலங்கை மீண்டும் மாட்டிக் கொள்ளுமா ?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது. உலக நாடுகளுக்களின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வில் இலங்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் மீண்டுமொரு முறை இலங்கை மீது அனைத்துலகத்தினுடைய கவனம் திரும்பும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வலையில் இலங்கை மீண்டும் மாட்டிக் கொண்டு அனைத்துலகத்தின் கவனத்தையும் தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைக்குமா என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந் நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதிக்குள் இலங்கை மனிதஉரிமைகள் தொடர்பிலான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நா பல்வேறு அமைப்புகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அறிக்கைகளுக்கு பதிலளிக்க இலங்கைக்கு எதிர்வரும் யூலை 23ம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் மாதம் இலங்கை தொடர்பான மீளாய்வு விவாதம் நடைபெறவுள்ளது. 

எனினும் அதற்கு முன்னர் அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வினை இலங்கை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நாவின் கடந்த ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை மீது சர்வதேசத்தின் முழுக்கவனமும் திருப்பப்பட்டிருந்தமையும் அமெரிக்காவின் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post