Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலைப் புலிகளின் தகவல்களை வழங்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு இல்லை; இலங்கை அரசாங்கம்

சர்வதேசத்தில் வாழ்ந்துவரும் விடுதலைப்புலிகள் பற்றிய தகவல்களை எமக்கு வெளியிட அந்நாடுகள் பின்னடிப்பு செய்கின்றன என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. 

சர்வதேசத்தில் தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்ற விடுதலைப்புலிகள் தொடர்பிலான தகவல்களை எமக்கு வழங்குவதற்கு சர்வதேச அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அவுஸ்திரேலியா முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குணரட்ணம் அண்மையில் இலங்கைக்கு தனது பெயரினை மாற்றி வேறு பெயரில் வந்து போயுள்ளார். 

இவர், இலங்கையில் கடத்தப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. அவுஸ்திரேலிய பிரஜையான குணரட்ணம், அங்கு நோயல் முதலிகே என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றார் என்பதனை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதர் தெளிவுப்படுத்தியுள்ளார். 

இலங்கையில் இருந்து தப்பி சர்வதேச நாடுகளில் தற்போது வாழ்ந்து வருகின்ற விடுதலைப் புலிகள் பலர், வேறு பெயர்களில் செயற்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதில் சர்வதேச நாடுகள் போதியளவு ஒத்துழைப்பினை எமக்கு வழங்கவில்லை எனவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். 

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டனர் என சிறிலங்கா அரசு வெற்றி விழாக்களை பெருமெடுப்பில் வருடாவருடம் தவறாது கொண்டாடி வருகின்றது. அத்துடன் சமாதான சூழல் ஏற்பட்டுவிட்டது என்று அரசினால் அறிவித்து 3 ஆண்டுகளாகியும் கூட இன்னும் புலிகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றது என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருவது கேலிக்குரிய விடயமாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post