விழுப்புரம் அருகே பெண்ணை மதமாற்றம் செய்ய முயன்றதாக பாதிரியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்..
கோலியனூரைச் சேர்ந்த ஜான் உதயகுமார், விழுப்புரம் அருகே உள்ள சமத்துவபுரம் சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இவர் மீது மதமாற்றம் செய்வதாக புகார் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் ஜான் உதயகுமாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் சுமதியை தடியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விழுப்புரம் காவல்நிலையத்தில் தம்மை மதமாற்றம் செய்ய உதயகுமார் முயற்சித்ததாக புகார் தெரிவித்தார் சுமதி. இப்புகாரைத் தொடர்ந்து மதமாற்றப் புகாரின் பேரில் ஜான் உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.