Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மக்கள் பிரச்சனையை பற்றி மக்களே நடித்து தயாரித்துள்ள திரைப்படம் - எங்கள் மண்






மக்கள் பிரச்சனையை பற்றி மக்களே நடித்து தயாரித்துள்ள திரைப்படம் - எங்கள் மண்

இந்த படத்தை முன்னின்று மக்களோடு இணைந்து உருவாகிய தமிழர் எழுச்சி இயக்கம் செய்திக் குறிப்பு :

நகர விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களை வெளியேற்றி பெரு முதலாளிகளை அனுமதிக்கும் அரசுகளின் அராஜக செயலை வெளிக்கொணரும் வகையில் தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் வெளியிடும் முதல் திரைப்படம் " எங்கள் மண் "தமிழக வரலாற்றில் மக்கள் முதலீட்டில் , மக்கள் நடிப்பில், மக்கள் மன்றத்தில் வெளியிடும் முதல் திரைப்படம் என்ற சிறப்பு பெற்ற இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 15 அடையார் முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் வெளியிட படுகிறது. காலை மாலை இரண்டு காட்சிகள் திரையிட படும்!!பழந்தமிழர் நகரத்தில் வசிப்பதா என்கிற ஆதிக்க சாதிய , பார்பனிய , முதலாளித்துவ சதிகளை அம்பலபடுத்தும் இத்திரைப்படத்திற்கு தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.தொடர்பிற்கு : 97108 54760 , 98412 28523


தமிழ் தேசத்தின் தற்போதுள்ள பொதுமைகளில் முதன்மையானவராக எம் நெஞ்சத்தில் நிற்கும் அம்மா தாமரை பெருஞ்சித்திரனார் அவர்கள் "எங்கள் மண் " திரைப்படத்தின் குறுவட்டை வெளியிட அனைத்து கட்சி அமைப்பு சார்ந்த நபர்களும் அதை பெற்று கொள்கிறார்கள். மாலை பரிசளிப்பு விழாவிற்கான நிகழ்வும் நடைபெறுகிறது

நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படம் காலை ஒரு காட்சியும் மாலை ஒரு காட்சியும் காட்டப்படும். பொருளாதார சிக்கலில் இப்படம் வெளியிட இருக்கிற நிலையில் தோழர்கள் அனைவருக்கும் முடிந்த அளவில் அழைப்பிதழை நேரில் கொடுத்து இருக்கிறோம். தொடர்ந்து இப்படத்தினை பரப்பும் வேலைகளை உங்களிடத்திலே விட்டு விடுகிறோம். அழைப்பிதழ் தவறிய தோழர்கள் இந்த அழைபிதழினை உங்களுக்கானதாக கருதி நிகழ்விற்கு வந்து தங்களுடைய பங்களிப்பினை தருமாறு கேட்டு கொள்கிறோம்.

தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி தமிழனாக இல்லாமல் உண்மை தமிழனாக வாழ அனைத்து தமிழர்களுக்கும் குரல் கொடுக்க ஆயத்தமாகுங்கள். எங்கள் மண் நிகழ்வினுள் சந்திப்போம்


[vuukle-powerbar-top]

Recent Post