பல்வேறு வழக்குகளில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டதால் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து அவரை கண்காணிப்பில் வைத்துள்ளனர். ரிஷியூர் கஸ்தூரி என்பவர் தனது வீட்டை திவாகரன் இடித்ததாக கூறி கொடுத்த புகாரின் பேரில பிப்ரவரி 2ம் தேதி திவாகரன் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் எடையூர் கிராமத்தில் சரவணன் என்பவரை கடத்தி, மிரட்டியது மற்றும் ரிஷியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழார்வனுக்கு கொலைமிரட்டல் விடுத்தது, மன்னார்குடி ருக்மணிபாளையத்தில் அரசு இடத்தை ஆக்கிரமித்தது ஆகிய வழக்குகள் திவாகரன் மீது தொடரப்பட்டன.
இதில் இரண்டு வழக்குகளில் திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் மற்ற வழக்குகளில் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து அவர் சிறையிலேயே அடைபட்டுள்ளார். சிறை வாசம் திவாகரனை உலுக்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சற்று தெளிர்ச்சியுடன் காணப்பட்ட அவர் தற்போது சோகமாகவும், சோர்வாகவும் காணப்படுகிறாராம்.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலேயே அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். மேலும் சிறை மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்றும் நெஞ்சு வலிப்பதாக திவாகரன் கூறவே அவரைப் பரிசோதனை செய்து மருந்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.