தமிழ் மற்றும் தெலுகுவில் தமன்னா நடிக்கும் படமான ஏன் என்றால் காதல் என்பேன் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தேறியது.எதுகந்தே பிரேமந்தா என்று தெலுகுவில் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார்.
நேற்று நடைபெற்ற பட தொடக்க விழாவில்,பிரபல தமிழ் பட இயக்குனர் முருகதாஸ் மற்றும், லிங்குசாமி ஆகியோர் படத்திற்கான சின்னத்தை வெளியிட்டு வைத்தனர்.
நடிகர் ராம் நாயகனாகவும், நடிகை தமன்னா நாயகியாகவும் நடிக்கின்றனர்.இயக்குனர் கருணாகரன் இப்படத்தை இயக்குகிறார்.ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.