நில அபகரிப்பு வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜனின் காவலை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையில் இறந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் பகுதியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தின் அருகே தனக்கு சொந்தமான 2 கிரவுண்ட் நிலத்தை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் சிலர் அபகரித்ததாக, அமலாபுஷ்பமேரி என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காவல் முடிவடைந்ததை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திருச்சி மத்திய சிறையில் இருந்த நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து அவரது சிறைக் காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் முருகன் உத்தரவிட்டார்.