கோடை விடுமுறைக்காக ஏப்ரல் 27ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஜுன் 1ம் தேதி திறக்கப்படும் என்று தமிழகக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதியே அனைத்து பள்ளிகளும் தேர்வுகளை நடத்தி முடித்து மூடப்பட வேண்டும் என்றும், வருகைப் பதிவு குறைவாக உள்ள பள்ளிகள் மட்டும் ஏப்ரல் 30ம் தேதி வரை இயங்கலாம் என்றும் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகள் ஜுன் 1ம் தேதி துவக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.