திருக்குறள் வழிகாட்டும் வணிக மேலாண்மை ! தமிழ் வணிகர்களுக்கு சிறப்பு வகுப்பு !
கடந்த சனிக்கிழமை அன்று தமிழர் பரிந்துரை வணிகக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன் . இக்கூட்டத்தில் திருக்குறள் வணிகர்களுக்கு எவ்வாறு சிறப்பான வணிகம் செய்வது குறித்து வழி காட்டுகிறது என்பதை 30 நிமிடங்கள் கருத்துரை வழங்கினேன். Business Management என்னும் வணிக மேலாண்மையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் முன்னோடியாக விளங்கியுள்ளார் என்பதை ஆதராங்களுடன் விளக்கினேன். எந்தெந்த திருக்குறள் எந்தெந்த வணிக மேலாண்மை துறைகளை குறித்து பேசுகிறது என்பதையும் முதலீட்டாளர்கள் எவற்றையெல்லாம் கருதுகோளாக வைத்து வணிகம் செய்ய வேண்டும் என்பதையும் திருக்குறள் மூலமாக முன்வைத்தேன் . மெக்டோனல்ட் , கே.எப்.சி போன்ற பெரு நிறுவனங்கள் எப்படியான வணிக உத்தியை கடைபிடிக்கிறார்கள் என்பதையும் இதை பற்றி வள்ளுவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வாறு கணித்துள்ளார் என்பதையும் விளக்கினேன்.
30 நிமைய கருத்துரையில் நான் பேசிய கருத்துரை கூறுகள் வருமாறு .. – Business Ethics, Business Planning, Profit Loss Analysis, Strength
analysis, Investment Planning &
Returns analysis, Business Season analysis, Location and Time of Business, Business model – franchise or Management models, business execution, Self analysis - Strength
of competitors SWOT analysis, Business Faults of Big companies, Human Resource
management, Business
Motivation.
மேற்கண்ட வணிக மேலாண்மை கூறுகள் அனைத்தும் திருக்குறளில் இருப்பது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் நற்பேறு . இவற்றையெல்லாம் நாம் ஆய்வு செய்து வணிகத்தில் சிறந்து விளங்குதல் வேண்டும்.
,