புதுடெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. விலங்குகள் நலவாரியம் தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டின் போது காளை மாடுகள் கொடுமைப் படுத்தபடுவதாகவும், இதனால் காளைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகள் நலவாரியம் சார்பாக வாதம் செய்யப்பட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசு இதற்கு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், இதனால் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாதம் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தற்போது, ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.