காரைக்காலைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மகள் வினோதினி. மென்பொருள் பொறியாளரான இவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர
மாதம் 14 ஆம் தேதி காரைக்கால் பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த வினோதினி மீது, அவ்வூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார்.
கட்டிடத்தொழிலாளியான சுரேஷின் ஒருதலை காதலை வினோதினி ஏற்காததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் இந்த ஈனச்செயலைச் செய்ததாக கூறப்படுகிறது. ஆசிட் வீச்சில் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் வெந்த நிலையில் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வினோதினி சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இம்மருத்துவமனையில் தீக்காயதுறை தலைவராக இருக்கும் மருத்துவர் ஜெயராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் வினோதினிக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முகத்தில் நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் வினோதினியின் இரு கண்களும் முழுவதுமாக எரிந்து கரிந்துவிட்டன. முகமும் கருகிய நிலையில், அவரின் தொடைப்பகுதியிலிருந்து சதையினை வெட்டி எடுத்து முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கண்கள் இருந்த பகுதியும் சதையால் தற்போது தைத்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிட்சை நடந்து வருகிறது.
வினோதினியின் தந்தை செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். குடும்பத்திற்கான செலவுக்குத் தற்போது அவரின் தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், வினோதினிக்குத் தொடரவேண்டிய சிகிட்சைக்குப் பணமின்றி திண்டாடுகின்றனர்.
கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக்கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு கீழ்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வினோதினிக்கு உதவி செய்ய தொண்டுமனம் படைத்தோர் கீழ்கண்ட அவரின் தந்தை வங்கி கணக்கில் தங்கள் உதவியினை அனுப்பி வைக்கலாம்:
ஜெயபாலன்,
கணக்கு எண்: 603899558
இந்தியன் வங்கி
கீழ்பாக்கம் கிளை
IFSC NO IDIB000K037