பல பிரபல தமிழ் இசையமைப்பாளர்களின் ஆஸ்தான பாடலாசிரியராக விளங்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி வெளியிட்ட "தண்ணீர் தேசம்" என்ற கதை திரைப்படமான அவதாரம் எடுக்கவுள்ளது.
கடல் சார்ந்த பகுதியில் நடக்கும் இனிமையான காதல் கதையம்சம் கொண்ட இக்கதையை, சிவன் படமாக இயக்கவுள்ளார்.முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்ட தயாரிக்கப்படவுள்ள இப்படத்திற்காக திரைக்கதை வசனம் எழுதவுள்ளார் வைரமுத்து.
மலேசியாவை மையமாக கொண்ட ஒரு புதிய பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.இப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் வரும் 2013 இல் ஆரம்பமாகும் என தெரிகிறது.