யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் யாழ் நகரில் இன்று பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
யாழ் பேருந்துநலையத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இலங்கை
இராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.