
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், முக்கிய சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் மழை பெய்ததால், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மற்றும் நாகை மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஆரம்பமான அக்டோபர் மாதம் முதல் இதுவரை போதிய மழை பெய்யாத நிலையில், தற்போது பெய்துள்ள மழை பலருக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.