முகத்தில் அமிலம் வீசி தாக்கப்பட்ட வினோதினி இப்போது அரசினர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப் பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் இரு கண்களும் முற்றிலும் பாதிப்பு அடைத்துள்ளது. அவரையும் அவரது குடும்பத்தையும் மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் வழங்கினோம் . ஒரு அழகான பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூர தண்டனையை வழங்கிவிட்டான் ஒரு கொடூரன் . தன்னை காதலிக்கவில்லை என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்து விட்டான் . விநோதினியை நம்பித் தான் இந்த குடும்பமே வாழ்ந்து வந்தது. வினோதினியின் அப்பா தனது மகளின் நிலையை நினைத்து நினைத்து கண்ணீர் விட்டு அழுகிறார் . அவரால் பேச முடியாததால் வினோதினியின் தாய் மாமன் தான் நம்மிடம் பேசினார் . இவ்வளவு நடந்த பின்பும் , வினோதினியின் தந்தை , இனி எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது என்று கதறுகிறார். விநோதினியை காப்பாற்றிய போது அவரது தந்தைக்கு ஏற்பட்டுள்ள காயத்தை நீங்களே பார்க்கலாம் . அவருக்கே இப்படி ஒரு காயம் ஏற்பட்டுள்ளது என்றால் விநோதினியை சற்று நினைத்துப் பாருங்கள். அவரது முகம் முழுவதும் , உடல் ஒரு புறம் முழுவதும் சிதைந்து வெந்து உள்ளது . இதுவரை அரசு வினோதினியின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. இந்தக் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம் . தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் இவரை வந்து பார்கவில்லை . இவரது மருத்துவத்திற்கு அவசரமாக உதவி தேவைப் படுகிறது. தமிழ் மக்கள் அவசியம் விநோதினியை காப்பாற்ற அணைத்து உதவியும் செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் . கட்சி தலைவர்கள் தயவு செய்து இவரை பார்க்க வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவரது தந்தை ஜெயபாலன் . தாய் மாமன் ரமேஷ் . அலைபேசி - 9944161416