![]() |
கர்நாடகா மீண்டும் மறுப்பு! |
தமிழகத்தில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பா நெல் பயிருக்கு ஜனவரி மாதம் வரை மொத்தம் 65 டி.எம்.சி நீர் தேவை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசு, மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு நீர் தர முடியாது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் நாரிமன், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். தமிழகத்திற்கு 20 டி.எம்.சி நீர் விட உத்தரவிட்டால், கர்நாடகத்தின் நிலை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் நாரிமன் தமிழகத்திற்கு தண்ணீரே தர இயலாது என்று பதிலளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.