
அவர் மேலும் தெரிவிக்கையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒரு கூட்டத்தினர் அச்சத்தை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையினை கெடுக்க நினைக்கின்றனர். இதை முறியடிக்கும் வகையிலையே இந்தியாவும் ரஷ்சியாவும் இணைந்து மிக பாதுகாப்பான அணு உலையினை இயக்க ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலிலே தவறான கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டாம் என வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாசன் கூறியது அணு உலைக்கு எதிராக போராடும் போராளிகளை குறை கூறும் வகையில் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஒரு ஆபத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் மக்களின் வாழ்க்கையினை கெடுக்க முனைய மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.