விருதுநகரில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் கீழ அழகியநல்லூரைச் சேர்ந்த சிறுவன் பன்னீர் செல்வம்.காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவனை பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவன் இன்று உயிரிழந்தான்.
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுபடுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்தாலும் அரசு அதை கவனிப்பதாக தெரியவில்லை.